ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வரும் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால் எந்த மாதிரியான கதைகளில் நடிப்பது, எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிப்பது என்று அவருக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'ஹவுஸ்புல் 5' வெளிவந்துள்ளது. இதனால் படம் குறித்து ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக படம் வெளியான தியேட்டர்களுக்கு சென்று முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு மைக்கை பிடித்து படம் பார்த்து திரும்பும் ரசிகர்களிடம் ஒரு யு-டியூபரை போல படத்தை பற்றிய அபிப்ராயத்தை கேட்டுள்ளார்.
இதில் அக்ஷய் குமார் நல்ல நடிகர் ஆனால் கதை தேர்வில் ரொம்ப வீக், ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார், ஆக்ஷன் படங்களை தவிர்த்து அழுத்தமான கதையம்சமுள்ள படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.