பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் ஸ்ருதிநாராயணன். பின்னர், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கினார். இவர் ஹீரோயினாக நடித்த 'கட்ஸ்' என்ற படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. ரங்கராஜ் இயக்கி, அதில் ஹீரோவாக நடித்துள்ளார். கதைப்படி, அப்பா, மகன் என 2 கேரக்டரில் ரங்கராஜ் வருகிறார். அதில் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக ஸ்ருதி நாராயணன் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து பேசிய ரங்கராஜ் ''பல ஆண்டுகள் போராடி இந்த படத்தை எடுத்துள்ளேன். ஆனால், முதலில் சொன்ன தேதியில் இந்த படம் வெளியாகவில்லை. கமல்ஹாசனின் 'தக்லைப்' வந்ததால் எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. இப்போது இந்த வாரம் 77 தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகிறது. ஒரு படத்தை பார்க்காமலே குறைவான தியேட்டர் ஒதுக்குகிறார்கள். 'கட்ஸ்' படத்தில் நல்ல நடிப்பை தந்து இருக்கிறார் ஸ்ருதிநாராயணன். அவர் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு சிங்கிள் ஷாட்டில் பெர்பார்மன்சில் கலக்கியிருக்கிறார். இந்த படத்துக்காக கடுமையாக உழைத்து இருக்கிறார். இங்கே தவறு செய்யாத மனிதன் கிடையாது. அவருக்கு ஒரு அவப்பெயர் வந்து இருக்கிறது. அவரை வாழ விடுங்க,'' என்றார்.