மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
தமிழ் திரையுலகின் மும்மூர்த்திகளாகவும், நட்சத்திர நாயகர்களாகவும் இருந்த எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகிய இம்மூவரின் திரைப்படங்களிலும் நடித்து, ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்தான் நகைச்சுவை நடிகர் ஜே பி சந்திரபாபு. இவர் திரையுலகின் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் படத்தில் நடிக்கும் நாயகனுக்கு இணையான ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகராகவும் இருந்திருக்கின்றார். நடிப்பைத் தாண்டி, ஒரு தலைசிறந்த பின்னணிப் பாடகராகவும் அறியப்படும் இவர், எண்ணற்ற திரைப்படங்களில் ஏராளமான பல காவியப் பாடல்களைப் பாடியிருக்கின்றார்.
மேற்கத்திய பாணியில் வெகு நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்த பெருமையும் இவருக்குண்டு. இத்தனை சிறப்புகளைக் கொண்ட இவர், தன் இன்னுயிரைப் பணயம் வைத்துத்தான் கலையுலகில் கால் பதித்திருக்கின்றார். சினிமா மீது கொண்ட மோகத்தால், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்து, அலைந்து, திரிந்தும் சினிமாவில் நடிக்க வாய்ப்பேதும் கிடைக்காமல் போக, அவரது கடைசி நம்பிக்கையாக இருந்த 'ஜெமினி ஸ்டூடியோ'விலும் தோல்வியே மிஞ்ச, ஒரு நாள், ஜெமினி ஸ்டூடியோவில் ஜே பி சந்திரபாபு சுருண்டு மயங்கி விழுந்திருந்ததைக் கண்ட படப்பிடிப்புக் கூடத்தில் ஒரே பரபரப்பு. ஆம்புலன்ஸ் வந்து அவரை அள்ளிப் போட்டுக்கொண்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று உயிரைக் காப்பாற்ற, பின் போலீஸ் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
உன் பெயர் என்ன? என்று போலீஸ் அதிகாரி கேட்க, சந்திரபாபு என பதில் வந்தது அவரிடமிருந்து. தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தாயா? என கேட்க, ஆமாம்! என்றார். ஏன்? என மீண்டும் போலீஸ் தரப்பிலிருந்து கேள்வி எழ, சினிமாவில் நடிக்க வந்தேன் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை என பதில் தந்தார் சந்திரபாபு. அதன் பின்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை ஆரம்பமானது. ஏன் இப்படிச் செய்தாய்? என்று நீதிபதி சந்திரபாபுவைப் பார்த்து கேட்க, எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. அதனால் விஷம் குடித்தேன் என்று சந்திரபாபுவிடம் இருந்து பதில் வந்தது.
இனிமேல் இந்தமாதிரி செய்வாயா? என்று நீதிபதி கேட்க, சொல்ல முடியாது என்று பதில் தந்தார் சந்திரபாபு. ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்று நீதிபதி அவரைப் பார்த்து கேட்க, தனது சட்டைப் பையிலிருந்து தீப்பெட்டியை எடுத்து, அதிலிருந்த தீக்குச்சியை உரசி, தனது உள்ளங்கை மீது அந்த ஜ்வாலையைப் பாய்ச்சினார் சந்திரபாபு. என்ன செய்கிறாய்? என மீண்டும் நீதிபதி கேட்க, நான் செய்ததை உங்களால் பார்க்க முடிந்தது. ஆனால் அந்தச் சூட்டை உங்களால் உணர முடியாது. அதே போலத்தான் என் உணர்ச்சிகளை உங்களால் பீல் பண்ண முடியாது என பதில் தந்தார் சந்திரபாபு. இது முதல் முறை என்பதால் நீதிமன்றம் அவரை மன்னித்து விடுவித்தது.
இத்தனைப் பெரிய போராட்டத்திற்குப் பின் தனது உயிரையே பணயம் வைத்து, ஜே பி சந்திரபாபு பெற்ற திரைப்பட வாய்ப்புதான் 1947ம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி எஸ் ராமையாவின் கதை வசனம் மற்றும் இயக்கத்தில் தீபாவளித் திருநாளன்று வெளிவந்த “தன அமராவதி” என்ற திரைப்பட வாய்ப்பு. எஸ் எம் குமரேசன், பி எஸ் சரோஜா, புளிமூட்டை ராமசாமி ஆகியோருடன் இணைந்து சந்திரபாபுவும் நடித்திருந்தார். படத்தில் மாணிக்கம் செட்டியாராக புளிமூட்டை ராமசாமியும், ரத்னம் செட்டியாராக சந்திரபாபுவும் நகைச்சுவை விருந்தளித்திருந்த இத்திரைப்படம்தான் நகைச்சுவை நடிகர் ஜே பி சந்திரபாபுவின் முதல் திரைப்படம்.