அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து | பிளாஷ்பேக்: இளையராஜா கங்கை அமரன் இணைந்த படம் | பிளாஷ்பேக் : பாலிவுட்டை கலக்கிய வாசன் | 25வது நாளில் 'மார்கன்', சில நாட்களில் ஓடிடியில்… | பேதங்களை மறந்து திறமைக்கு வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா: ஷில்பா மஞ்சுநாத் | பிளாஷ்பேக்: படச் சுருளை எரித்துவிடச் சொன்ன தணிக்கை அதிகாரி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை | சினிமாவில் ஜெயிக்க 25 ஆண்டுகளாக போராடுகிறேன் : உதயா உருக்கம் | வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா? | ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி |
புதிய திரைப்படங்களை ஓடிடியில் வாங்குவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. பல பெரிய படங்கள் கூட தங்கள் ரிலீஸ் செய்தியை அறிவிப்பதற்காக ஓடிடியின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கின்றனர். அதேசமயம் சமீபகாலமாக பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான சில படங்கள் தொடர்ந்து அவ்வப்போது ஓடிடி தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இப்படி அந்த பழைய படங்களை ஓடிடி நிறுவனங்கள் தேர்ந்தெடுப்பதற்கு சில ஆச்சர்யமான முறைகளை பின்பற்றி வருகின்றன.
அதாவது திடீரென சோசியல் மீடியாவில ஏதோ ஒரு படத்தின் பாடலும் காட்சியும் ஹிட் ஆகிறது என்றாலோ அல்லது பழைய படத்தின் பாடல்கள் லேட்டஸ்டாக வெளியான படத்தில் இடம் பெற்று வைரல் ஆகிறது என்றாலோ ரசிகர்கள் அதை ஆர்வமாக பார்க்கிறார்கள், அந்த படத்தை பற்றி தேட ஆரம்பிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு உடனடியாக அந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர்.
இதில் இன்னும் ஒருபடி மேலே போய் சமீபத்தில் மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார் அல்லவா, அந்த விஷயம் கடந்த இரண்டு நாட்களில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து மதயானை கூட்டம் திரைப்படம் தற்போது ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இத்தனைக்கும் இந்த படம் 2013ல் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.