‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா |

நடிகர் பஹத் பாசில் சில ஆண்டுகளாக சந்தேகமே இல்லாமல் தென்னிந்திய அளவில் இயக்குனர்களாலும், தயாரிப்பாளர்களாலும், அவ்வளவு ஏன் ரசிகர்களாலும் மிகவும் தேடப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார். அவர் வில்லனாக நடித்தாலும், குணச்சித்திர கதாபாத்திரங்களில நடித்தாலும் கூட அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. அதேசமயம் அவர் தனக்கென லேட்டஸ்டான ஆண்ட்ராய்டு போன் எதையும் பயன்படுத்துவது இல்லை என்கிற தகவலை பிரபல மலையாள நடிகர் வினய் போர்ட் சமீபத்தில் கூறியுள்ளார். இவர் பிரேமம் படத்தில் சாய் பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது விரைவில் வெளியாக இருக்கும் பஹத் பாசிலின் ஓடும் குதிரை சாதும் குதிரை என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
பஹத் பாசில் பற்றி இவர் ஆச்சரியத்துடன் கூறும்போது, “அவர் மிகவும் பேசிக்கான லெவலிலேயே ஒரு செல்போனை பயன்படுத்துகிறார், அவரிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லை. அதுமட்டுமல்ல இன்ஸ்டாகிராமில் அவருக்கு எந்த அக்கவுண்டும் இல்லை. என்னை போன்றவர்கள் பெரும்பாலான நேரத்தை இன்ஸ்டாகிராமிலேயே செலவழிக்கிறோம். ஆனால் அப்படி ஸ்மார்ட்போன் கூட இல்லாத பஹத் பாசிலை தேடி எப்படி இந்திய அளவில் பல வாய்ப்புகள் வருகின்றன, அவரை மற்றவர்கள் எப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.