தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

'அக்யூஸ்ட்' என்ற படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இந்த படவிழாவில் பேசிய உதயா, ''நான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'திருநெல்வேலி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனேன். அந்த படம் 2000ம் ஆண்டு வந்தது. பின்னர், பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தேன். மறைந்த என் அம்மாதான் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். ஒரு கட்டத்தில் திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.'' என்றார்.
இந்த விழாவுக்கு யோகிபாபு வரவில்லை. ஆனால், வீடியோ காலில் ''எனக்கு இரவு படப்பிடிப்பு என்பதால் வர முடியவில்லை. படம் நன்றாக வந்துள்ளது'' என்று பேசினார். சமீபகாலமாக அவர் விழாவுக்கு வருவதில்லை என புகார் வருவதால், வராத நிலையில் இப்படி வீடியோகாலில் பேசியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.




