ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களை உடனடியாகப் பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்ததுதான் ஓடிடி தளங்கள். தமிழில் வெளியாகும் அனைத்து புதிய படங்களுமே நான்கே வாரங்களில் ஓடிடி தளங்களில் வந்துவிடுகிறது. அதனால், தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துதான் வருகிறது. 'தக் லைப்' படம் அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி வெளியீடு என அறிவித்துள்ளார்கள். இருந்தாலும் மற்றவர்களும் அதை பின்பற்றுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்த வாரம் ஓடிடி தளத்தில் கடுமையான போட்டி ஒன்று உருவாகியுள்ளது. சில முக்கிய படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த தமிழ்ப் படமான 'ரெட்ரோ', மோகன்லால், ஷோபனா நடித்த மலையாளப் படமான 'துடரும்', நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த தெலுங்குப் படமான ஹிட் 3' ஆகிய படங்கள் கடந்த இரண்டு நாட்களாக ஓடிடி தளங்களில் அதிகமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. நாளை முதல் சசிகுமார், சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் ஓடிடியில் வெளியாகிறது. ரஜினிகாந்த், ராஜமவுலி என பல பிரபலங்கள் இப்படத்தைப் பாராட்டியுள்ளதால் இப்படம் ஓடிடியிலும் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த மொழிப் படத்தை ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது அடுத்த சில நாட்களில் வெளியாகும்.




