இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
தெலுங்குத் திரையுலகத்திற்காக தெலுங்கானா மாநில அரசு 'கட்டார்' விருதுகள் என்ற பெயரில் இந்த ஆண்டு முதல் விருதுகளை வழங்க உள்ளது. 2024ம் ஆண்டிற்கான விருதுகளை நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்கள்.
'நந்தி' விருதுகள் என்ற பெயரில் ஒன்றுபட்ட ஆந்திர மாநில அரசு சார்பாக பல வருடங்களாக வழங்கப்பட்டு வந்த விருதுகள் 10 ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்பு தெலுங்கானா சார்பில் 'கட்டார்' விருதுகள் வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக விருதுகள் எதுவும் வழங்காத நிலையில் அந்த ஆண்டுகளுக்கான சிறந்த 3 திரைப்படங்களுக்கான விருதுகளை மட்டும் நேற்று அறிவித்துள்ளார்கள். அதன்படி 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான சிறந்த படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜுன் 14ம் தேதி ஐதராபாத்தில் இந்த முதலாவது கட்டார் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தெலுங்குத் திரையுலகினர் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014
1. முதலாவது சிறந்த திரைப்படம் - ரன் ராஜா ரன்
2. இரண்டாவது சிறந்த திரைப்படம் - பாத்ஷாலா
3. மூன்றாவது சிறந்த திரைப்படம் - அல்லுடு சீனு
2015
1. ருத்ரமாதேவி
2. காஞ்சே
3. ஸ்ரீமந்துடு
2016
1. ஷதாமனம் பவதி
2. பெல்லி சூப்புலு
3. ஜனதா காரேஜ்
2017
1. பாகுபலி - 2
2. பிடா
3. த காசி அட்டாக்
2018
1. மகாநடி
2. ரங்கஸ்தலம்
3. கேர் ஆப் காஞ்சரபலேம்
2019
1. மகரிஷி
2. ஜெர்ஸி
3. மல்லேஷம்
2020
1. அலா வைகுந்தபுரம்லோ
2. கலர் போட்டோ
3. மிடில் கிளாஸ் மெலடிஸ்
2021
1. ஆர்ஆர்ஆர்
2. அகான்டா
3. உப்பெனா
2022
1. சீதா ராமம்
2. கார்த்திகேயா 2
3. மேஜர்
2023
1. பலாகம்
2. ஹனுமான்
3. பகவந்த் கேசரி