லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது அந்தபடம் சற்று முன்னதாகவே அக்டோபர் 1ம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த தேதியில் தனுஷின் இட்லி கடை படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டில் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனும் சிக்கினார். இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதனால் அன்றைய தேதியில் சூர்யா 45 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்.