அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பி.வாசு இயக்கிய 'சிவலிங்கா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பிரியா. அதன்பிறகு பூம் பூம் காளை, யுக சதம், டைனோசர்ஸ், பாம்பாட்டம் படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் அவர் புதிய படம் ஒன்றில் மாடலிங் துறையில் முன்னணியில் உள்ள தமிழ்வாணன் தயாரித்து, நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை 'போங்கு' படத்தை இயக்கிய தாஜ் இயக்குகிறார். எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். விஜய் எஸ். குமரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் தாஜ் கூறும்போது "உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம். அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை" என்றார்.