திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால் | மம்முட்டியின் களம்காவல் படம் சர்வதேச வசூலில் புதிய சாதனை | கார் விபத்தில் நடிகை நோரா பதேஹி காயம் | மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல் செய்தி | மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போகும் கருப்பு படம்! | ‛டாக்ஸிக்' படத்தில் நாடியாவாக கியாரா அத்வானி! | நானிக்கு ஜோடியாகும் கயாடு லோகர்! | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! | 2025ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர்கள், டீசர்கள் | படப்பிடிப்பில் அசவுகரியம்: ராதிகா ஆப்தே வேதனை |

'அனிமல்' படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ.300 கோடி என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதில் மிருணாள் தாக்கூர், சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என தகவல் பரவியது.
இது போலவே இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதில் சந்தீப் ரெட்டி வங்கா உடன் கருத்தியலாக ஒத்து வராததால் தீபிகா படுகோனே இந்த படத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் படக்குழு வேறு பாலிவுட் நடிகையை தேடி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.