லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாள நடிகர் மோகன்லாலின் 65வது பிறந்த நாள் நேற்று. தொடர் வெற்றிகளையும், வசூலையும் குவித்து வரும் மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று மோகன்லால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: எனது பிறந்தநாள் அன்று ஏற்பட்டுள்ள சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பானு பிரகாஷ் எழுதிய என் வாழ்க்கை பற்றிய கதை, 'முகரகம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகிறது.
என் மதிப்புக்குரிய எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் முன்னுரை எழுதியுள்ளார். இப்புத்தகம் என் 47 வருட திரையுலக வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. என் வாழ்க்கை சம்பவங்களை வார்த்தைகளாக மாற்றி எழுதி மொழிபெயர்க்க பானு பிரகாஷ் மேற்கொண்ட முயற்சி பெரியது. வரும் டிசம்பர் 25ம் தேதி புத்தகம் வெளியாகிறது. இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.