சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சுவாமி நடிப்பில் கடந்த 2015ல் வெளிவந்த படம் ‛தனி ஒருவன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது, மேலும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.
இதன் அடுத்த பாகமாக ‛தனி ஒருவன் 2' பற்றிய அறிவிப்பை 2023ல் ஒரு வீடியோ உடன் அறிவித்தனர். அதன்பிறகு, படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை; படப்பிடிப்பும் துவங்கவில்லை. இது குறித்து விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா ஆகியோரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மோகன் ராஜா, ‛‛தனி ஒருவன் 2 மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு, சரியான நேரம் வரும்போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்'' என்றார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா பேசுகையில், ‛‛மோகன் ராஜாவிடம் ‛தனி ஒருவன் 2'-ஐ தவிர்த்து 4 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றுமே அற்புதமாக இருக்கும். அதில் ஒரு கதையை மட்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தான் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். 'தனி ஒருவன் 2' பெரிய முதலீட்டைக் கொண்ட படம். முதல் பாகத்தை விட மிகவும் பெரியதாக இருக்கும். அதை சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருக்கிறோம். ரவி மோகன், நயன்தாரா என நிறைய நடிகர்கள் இருப்பதால் அனைவருடைய தேதிகளும் ஒன்றாக அமைய வேண்டும். அது ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட்'' என்றார்.