இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | என்னை சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்திகோங்க : விஜய் சேதுபதி | ஒரு மாதமாக காதல்... 4 மாதத்தில் திருமணம் : விஷால் சொல்கிறார் | பிளாஷ்பேக்: ஆட்டோ சங்கரை உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமான காட்சிகள் நீக்கம் |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து ஜூலை மாதம் திரைக்கு வருகிற படம் 'கிங்டம்'. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார், கவுதம் தின்னூரி இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படத்திற்கான புரொமோசன் நிகழ்ச்சிக்காக தமிழில் அளித்த பேட்டியில் அனிருத் குறித்து அவர் கூறியதாவது, " அனிருத் மிகவும் திறமையானவர். நான் அவருடைய ரசிகன். அனிருத் பாட்டில் வேற நடிகர்கள் இருந்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இப்போது அனிருத் பாட்டு எனக்குத்தான் வந்துள்ளது. ஒரு முறை எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப் போயிருந்தேன். அப்போ அந்த மெஷினுக்குள்ள என்ன அனுப்பிட்டாங்க. ஆனா நான் அனிருத் பாட்டு போடுங்கன்னு கேட்டு மெஷினுக்குள்ள வைப் பண்ணிட்டு இருந்தேன். இப்போ நானும் அனியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்." என தெரிவித்துள்ளார்.