அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் |
டூரிஸ்ட் பேமிலி படத்தில் ஹீரோயினாக நடித்த சிம்ரன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அந்த சமயத்தில் அவர் மகன் படிப்புக்கு லண்டனில் இருந்ததால் ஒரே ஒரு வீடியோ மட்டும் படம் குறித்து வெளியிட்டார். சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இப்போது டூரிஸ்ட் பேமிலி படக்குழுவுடன் திருநெல்வேலி சென்று அங்கு படம் குறித்து பேசியிருக்கிறார். அங்கு ஒரு தியேட்டரில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
சென்னையில் பேசாதவர் திருநெல்வேலிக்கு போய் பேச வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தால், டூரிஸ்ட் பேமிலி படத்தை யுவராஜ், நசரேத் பசிலியான் என்ற 2 இளைஞர்கள் தயாரித்து இருக்கிறார்கள். இதில் நசரேத் பசிலியான் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம். அதனால், லண்டனில் இருந்து சென்னை வந்தவுடன் அவரை தனது ஏரியா பக்கம் பிரமோஷனுக்காக அழைத்து சென்றுவிட்டாராம்.
அந்தகன், குட்பேட் அக்லியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்திலும் தனது நடிப்பு பேசப்படுவது, தனக்கு பாராட்டு குவிவதால் சிம்ரன் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதே பட நிறுவனம் இதற்கு முன்பு குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்து இருந்தது.