கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் | மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் |
டி.வி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ராகவ் ரங்கநாதன். 'ஜெர்ரி, வட்டாரம், சத்தம் போடாதே, சக்கரவியூகம், சிலம்பாட்டம், எந்திரன், நானே என்னுள் இல்லை, வேலாயுதம், டிக்கெட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'நஞ்சுபுரம்' என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராகவ் ரங்கநாதன் இயக்குனராகி உள்ளார். அவர் எழுதி இயக்கியுள்ள படம், 'நாக் நாக்'. இல்லுஷன்ஸ் இன்பினிட் சார்பில் தயாராகியுள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, 'பட்டாம்பூச்சி' நவீன் சுந்தர் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ராகவ் ரங்கநாதன் கூறும்போது, "இதற்கு முன்பு 'எந்திரன்', 'நஞ்சுபுரம்' உள்பட பல படங்களில் நடித்திருக்கிறேன். 'நாக் நாக்' படத்தில் புரொபசர் ஒருவரின் மரணம் குறித்து முன்பே தெரிந்துவிடுகிறது. அவர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள என்ன செய்கிறார் என்பதை ஒரே இரவில் நடந்து முடியும் கதையாக இயக்கி நடித்துள்ளேன். எனக்கு ஜோடியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார்" என்றார்.