ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

'கேஜிஎப், சலார்' படங்களை இயக்கிய கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் அடுத்ததாக ஜுனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஜுனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு 2022ம் ஆண்டே வெளியானது. ஆனால், சமீபத்தில் தான், இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜூன் 25ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் தலைப்பு ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. படத்திற்கு 'டிராகன்' என தலைப்பு வைத்திருப்பதாக இயக்குனர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அது தற்காலிக தலைப்பு தான் என்றாலும் அதே தலைப்பில் படம் வெளியாகுமா அல்லது வேறு தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும். ஏற்கனவே தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.