அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
ஒரு படத்திற்கு கதைக்கு பொருத்தமான தலைப்பு வைப்பதும் பின்னர் அந்த தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பி மாற்றப்படுவதும் அவ்வப்போது நடந்து வந்துள்ளது. ரஜினி படத்திற்குமே அது நடந்தது. அந்தப் படம் 'நான் மகான் அல்ல'.
கே. பாலச்சந்தர் குடும்பப் பாங்கான படங்களை இயக்கி வந்த போதும் அவ்வப்போது எஸ்.பி.முத்துராமன் - ரஜினி காமினேஷனில் பக்கா கமர்சியல் படங்கள் தயாரித்தார். இப்படி தயாரிக்கப்பட்ட ஒரு படம் தான் 'நான் மகான் அல்ல'. 1984ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ரஜினியுடன் ராதா, நம்பியார், சத்யராஜ், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு முதலில் 'நான் காந்தி அல்ல' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்தின் நாயகன் தானே வன்முறையை கையில் எடுத்துக் கொண்டு தண்டிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் காந்தி போல நானும் அஹிம்சையை கடைப்பிடிப்பவன் அல்ல குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்துடையவன் .
எனவே இந்த படத்தின் தலைப்பு மகாத்மா காந்தியை அவரது கருத்துக்களை தவறாக சித்தரிப்பதாக பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து படத்தின் தலைப்பு 'நான் மகான் அல்ல' என்று மாற்றப்பட்டது. படத்தில் காந்தி குறித்து அமைக்கப்பட்ட வசனங்களும் நீக்கப்பட்டது. படம் வெளியாகி 100 நாட்களை தாண்டி ஓடியது.