ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஹிட் 3 படம் வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் நானி கலந்து கொண்டு வருகிறார் . அப்போது ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, "'மேற்கத்திய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா யுனிவர்ஸ் இப்போது இந்தியாவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் வர்மா போன்ற இயக்குநர்கள் இதில் முன்னணியில் இருக்கின்றனர்.
மக்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் அல்லது ஒரு படத்தைச் சுற்றி உற்சாகத்தை உருவாக்கும் எதுவும் சினிமாவுக்கு நல்லது என நம்புகிறேன். நான் ஏற்கெனவே HIT போன்ற சினிமா யுனிவரசில் இணைந்துவிட்டேன். அதேப்போல லோகேஷ் கனகராஜின் படைப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால், நானும் அவருடைய சினிமா உலகில் இணைவது நடக்கும். அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.