மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் | முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் | ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? |

பெண் இயக்குனர்கள் குறைவாக உள்ள தமிழ் சினிமாவில் மற்றுமொரு இயக்குனராக களம் இறங்கி உள்ளார் ஜெயலட்சுமி. தனது ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்ட் நிறுவனத்திற்காக அவரே தயாரித்து இயக்கும் படம் 'என் காதலே'.
கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார். அறிமுக நடிகர் காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஜெயலட்சுமி கூறியதாவது: மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வரும் நாயகி லியாவிற்கு மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு இங்கு பல தடைகள் இருப்பதால் அவரது காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார். இறுதியில் லியாவின் ஆராய்ச்சி என்ன ஆனது அவர்கள் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை உணர்ச்சிபூர்வமாக உருவாக்கியிருக்கிறோம். ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்.
படப்பிடிப்பு கேரளா, காரைக்கால் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி போன்ற ஊர்களில் கடலும் கடல் சார்ந்த இடங்களில் நடைபெற்றுள்ளது. கோடை கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. என்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.




