ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தவர் ரூபஸ் பார்கர். அமெரிக்காவில் குடியேறி அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கிறார். சிறுவயது முதல் சினிமா மீதான தனியாத பற்றின் காரணமாக 2014ல் அமெரிக்காவில் பி2 பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி ஹாலிவுட் படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக அவர் தயாரித்த படம் 'சிட்டி ஆப் ட்ரீம்ஸ்'.
இந்த படம் அமெரிக்காவில் புலம் பெயர்ந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு நடக்கும் மிகப்பெரும் அநீதியை பட்டவர்த்தனமாக வெளிஉலகிற்கு தோலுரித்து காட்டி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 12 மில்லியன் புலம் பெயர் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு, அவர்கள் அனைவரும் ஆடை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டத்திற்கு புறம்பாக உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்படுவதை உண்மைக்கு வெகு நெருக்கமாக சொன்ன படம்.
'லயன்ஸ் கேட்' என்னும் ஹாலிவுட் வெளியீட்டு நிறுவனத்தின் மூலம், கடந்த ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு அமெரிக்க மக்கள் மற்றும் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் ஆஸ்கர் அகாடமி லைப்ரரியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.