ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்கள் கூட கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டதால் நகைச்சுவை நடிகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு நகைச்சுவையில் 'டிரென்ட் செட்டர்'களாக இருந்த வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்தனர்.
அதனால், ஏற்பட்ட இடைவெளியில் சூரி, யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக மக்கள் மனதில் குறிப்பிடும் அளவிற்கு இடம் பிடித்தனர். ஒரு 'டிரென்ட்'டை அவர்கள் உருவாக்குவதற்கு முன்பாகவே கதையின் நாயகர்களாக நடிக்க அவர்களும் போய்விட்டார்கள்.
'விடுதலை' படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் சூரி. தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'மாமன்' மே 16ம் தேதி வெளியாகிறது. அடுத்து அவர் நாயகனாக நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. யோகி பாபு இரண்டு பாதையிலும் பயணித்து வருகிறார்.
இதனிடையே, கதாநாயகர்களாக மாறிய வடிவேலு, சந்தானம் தற்போது இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த 'கேங்கர்ஸ்' அடுத்த வாரம் வெளியாகிறது. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' மே 16ம் தேதி வெளியாகிறது.
அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க வேண்டிய படங்களை தள்ளி வைத்துள்ளாராம் சந்தானம். ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள 49வது படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம் சந்தானம். அதற்காக அவருக்கு கதாநாயகனாக அவர் வாங்கும் சம்பளத்தைத் தருகிறார்களாம். தன்னை அறிமுகப்படுத்திய சிம்புவுக்காக சம்மதம் சொல்லியிருக்கிறார் சந்தானம்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களாகப் பெயர் வாங்கிய வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோரிடையே இப்படியான மாற்றம் திரையுலகம் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது.