ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன் | குடும்பத்துடன் நேரில் சென்று மோகன்லாலை சந்தித்த பஹத் பாசில் | தெலுங்கானா முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன துல்கர் சல்மான் | சொந்த வீட்டிலேயே கொடுமை : விஷால் பட நடிகை கண்ணீருடன் புகார், பரபரப்பான வீடியோ | லிப்லாக் காட்சிகளுக்கு 'நோ' சொல்கிறார் நிதி அகர்வால் | 2டி நிறுவனம் படத்தயாரிப்பை நிறுத்தியதா? | இளையராஜா பேரன்: இசையமைப்பாளர் ஆவது எப்போது? | ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா |
அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. அஜித் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு படம், மற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்குமா என்பதுதான் படம் பற்றிய பொதுவான விமர்சனமாக வெளிவந்தது.
அதையும் மீறி படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் 30.9 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களிலேயே இதுதான் அதிகபட்ச வசூல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நேற்று நாம் வெளியிட்ட செய்தியின்படியே தமிழகத்தில் 30 கோடி வசூலைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளிலும் 20 கோடி வரை வசூல் கிடைத்திருக்கும் என்று தகவல். அப்படி இருந்தால் நாம் யூகித்த முதல் நாள் வசூல் 50 கோடி என்பது உறுதியாகும்.
நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் வசூல் கொஞ்சம் குறைவு என்கிறார்கள். இன்று, நாளை, நாளை மறுநாள் தமிழ் வருடப் பிறப்பு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் ஏறுவதற்கு வாய்ப்புண்டு. மொத்தமாக 5 நாட்களில் 200 கோடி வசூலைக் கடக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.