அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய தங்கர் பச்சான், தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்கிற படத்தை இயக்கினார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதேசமயம் அவரது மகன் அடுத்ததாக இயக்குனர் சிவப்பிரகாஷ் என்பவர் இயக்கியுள்ள 'பேரன்பும் பெருங்கோபமும்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தான் இவரது முதல் படமாக வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.ஏ சந்திரசேகர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “தங்கர் பச்சானின் படங்களை திரைப்படங்களாக இல்லாமல் காவியங்களாக தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை நிறைய செதுக்க வேண்டும்... அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல... நான் கூட அதைத்தான் நினைத்தேன்.. ஆனால் நடக்கவில்லை.
90களில் நான் பிஸியாக இருந்தபோது என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சமயத்தில் நாமே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்து விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குனர்களிடம் போய் நின்றேன். ஒருவரும் முன்வரவில்லை. அதனால் வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன்.. ஆனால் இளைஞனான தன் மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்றால் அவரை இன்னொரு இளைஞன் தன் படத்தை இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைத்து தங்கர் பச்சான் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளார்” என்று கூறினார்.