அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கடந்த 2019-ல் மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் அந்த படத்தில் தனது வித்தியாசமான கண் சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து புருவ அழகி என்கிற பெயரையும் பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மாறி மாறி சில படங்களில் நடித்தாலும் அவருக்கு ஏற்ற வெளிச்சம் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த வகையில் தமிழில் முதல் அடியை எடுத்து வைத்த பிரியா பிரகாஷ் வாரியருக்கு தற்போது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'குட் பேட் அக்லி' இன்னும் திரையுலக வாசலை அகல திறந்து விட்டுள்ளது என்று சொல்லலாம். இந்த படத்தில் கொஞ்சம் எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்து தனது சோசியல் மீடியாவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.
இது குறித்து அவர் கூறும்போது, “எங்கிருந்து துவங்குவது என்று எனக்கு தெரியவில்லை. அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. எவ்வளவு எழுதினாலும் அஜித் சாரை பற்றி சொல்வதற்கு போதாது என்று தான் தெரிகிறது. அவருடனான என்னுடைய முதல் உரையாடலில் இருந்து கடைசி நாள் படப்பிடிப்பு வரை, அவர் வேறு யாரோ ஒருவர் அல்ல., நம்மை சேர்ந்த ஒருவர் என்பதை ஒவ்வொரு நாளும் உணரும் விதமாக செய்தார், குறிப்பாக கப்பலில் படமாக்கப்பட்ட காட்சிகளின் போது ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டு மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதது,
மேலும் உங்களுடைய குடும்பம், கார்கள், பயணம், ரேஸ் என ஒவ்வொன்றை குறித்தும் உங்களது பார்வை தெரிய வந்தபோது உங்கள் கண்களில் அவ்வளவு பிரகாசம் இருந்தது, இந்த அளவிற்கு தன் தொழிலை நேசிக்கும் ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. உங்களைப் போன்றவர்களின் பொறுமையும் படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும்போது என்னை போன்ற இளைஞர்களுக்கு இன்னும் பல வருடங்கள் பயணிப்பதற்கான ஒரு உந்து சக்தி ஆகவே இருக்கும் என்பது சந்தேகம் இல்லை. உண்மையிலேயே நீங்கள் ஜென்டில்மேன்.. எவ்வளவு உயரத்திற்கு போனாலும் நாம் தரையிலேயே கால் பதித்து நிற்க வேண்டும் என்கிற ஒரு நல்ல விஷயத்தை தான் உங்களிடம் இருந்து நான் எடுத்து செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.