ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹிட்டான பாடல்களை மீண்டும் தங்களது படங்களில் இடம் பெறச் செய்து, அதை டிரெண்ட் ஆக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தில் 'சக்கு சக்கு வத்திக்குச்சி' என்ற 1995ல் வெளிவந்த 'அசுரன்' படத்தின் பாடலைப் பயன்படுத்தி இருந்தார்கள். அது மிகவும் பிரபலமானது.
அதற்கடுத்து விஜய் நடிக்க லோகேஷ் இயக்கிய 'லியோ' படத்தில் 2000ம் ஆண்டில் வெளிவந்த 'ஏழையின் சிரிப்பில்' படத்தில் இடம்பெற்ற 'கரு கரு கருப்பாயி' என்ற பாடலை சண்டைக் காட்சி ஒன்றில் பயன்படுத்தினார்கள்.
கடந்த வருடம் வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தில் நாயகன் தினேஷ் கிரிக்கெட் விளையாட இறங்கும் பேதெல்லாம் 1989ல் வெளிவந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக்குடம்' பாடலைப் பயன்படுத்த அது தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி வரையிலும் பரபரப்பாக உள்ளது.
அதே ஸ்டைலை நேற்று வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சண்டைக் காட்சியில் 1982ல் வெளிவந்த 'சகல கலா வல்லவன்' படத்தில் இடம் பெற்ற 'இளமை இதோ இதோ' பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல மேலும் சில பல பழைய பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. மற்றவர்கள் ஒரே ஒரு பாடலை மட்டுமே பயன்படுத்தி இருக்க இதில் நிறைய பாடல்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இது ஒரு டிரெண்ட் ஆகவே இப்போது மாறிவிட்டது. இருந்தாலும் அந்தந்த படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் அவர்களது படங்களில் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் இடம் பெறுவதை அனுமதிப்பதற்கு வெட்கப்பட வேண்டும். அதிலும் 'குட் பேட் அக்லி' படத்தில் நிறைய பாடல்கள். அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், அஜித் படம் என்பதால் எதுவும் பேசாமல் இயக்குனர் சொல்வதைக் கேட்டு நடந்திருக்கக் கூடும். இருந்தாலும் அதனால் தனது தனித் தன்மை போய்விடும் என்பதை அவர் எதிர்காலத்திலாவது உணரட்டும்.