ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
ஓஎம்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் 'பனி'. இந்த படத்தை விஎன் ஆதித்யா இயக்குகிறார். கேத்தரின் தெரசா படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இவரோடு மகேஷ் ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கேத்ரின் தெரசா அதன் பிறகு கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, என 'க' வரிசை படங்களில் மளமளவென நடித்தார். பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான 'அருவம்' படத்தில் நடித்தார். 5 வருட இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது 'பனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் வி.என்.ஆதித்யா கூறியதாவது: இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது. ஆனால் மனிதன் தனக்குமட்டுமே இந்த உலகம் என்கிற எண்ணத்தில் மற்ற உயிரினங்களை பன்னெடுங்காலமாக மெல்ல மெல்ல அழித்து மனித உயிர்களே இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்தப்படம் மனித உயிர் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே மற்ற உயிரினங்களின் உயிரும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் படமாகவும் இருக்கும். இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகவும் இருக்கும்.
இந்தப்படத்திற்கு மிகப்பொருத்தமான கதாநாயகி கேத்தரின் தெரசா என்பது படம் பார்க்கும்பொழுது எல்லோரும் உணருவார்கள். அந்த அளவுக்கு அவரின் நடிப்பு இந்தப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது இந்தி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் பல மொழிகளில் வெளியாகிறது"என்றார் .
இதற்கிடையில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் 'கேங்கர்ஸ்' படத்திலும் கேத்ரின் தெரசா நடித்துள்ளார். இந்த படம் வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. இந்த இரண்டு படங்களும் தனக்கு நல்லதொரு ரீ என்ட்ரி கொடுக்கும் என்று நம்புகிறார் கேத்ரின்.