மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! |
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க கடந்த வருடம் பிப்ரவரி 9ம் தேதி வெளியான படம் 'லால் சலாம்'. எதிர்பாராத விதமாக படம் தோல்வியைத் தழுவியது.
ஒரு புதிய படம் வெளிவந்தால் நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கம். ஆனால், 'லால் சலாம்' படத்தின் ஓடிடி வெளியீடு என்பது புரியாத புதிராகவே இருந்தது. படத்தின் பல காட்சிகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்' காணாமல் போனதால் படத்தில் அந்தக் காட்சிகளைச் சேர்க்க முடியவில்லை. அதுவும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என இயக்குனர் தரப்பிலும் சொல்லப்பட்டது.
பல தேடல்களுக்குப் பிறகு காணாமல் போன ஹார்ட் டிஸ்க் கிடைத்தது. அதிலிருந்து காட்சிகளை எடுத்து மீண்டும் சேர்த்து ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தார்கள். அதனால்தான் ஓடிடி வெளியீடு தாமதமானது என்று சொல்லப்பட்டது.
இதனிடையே, நாளை தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இது போல சில முறை இப்படி செய்தி வெளிவந்தாலும் படம் வெளியாகவில்லை. இந்த முறையாவது கண்டிப்பாக வெளிவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.