பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் | இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் | பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார் | என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம் | சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! |
சமீபத்தில் டிவி நடிகை ஸ்ருதி நாராயணின் ஆபாச வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு நடிகை ஷர்மிளா, பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழில் அம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருமான நடிகை சனம் ஷெட்டி தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛ஸ்ருதி நாராயணின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களிடம் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். இது தனிப்பட்ட விஷயம் கிடையாது. இது ஒரு வியாபாரம். காஸ்டிங் கவுச் என்கிற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட ஒரு செயல்.
ஆடிஷன் என்ற பெயரில் என்னனாலும் கேட்பீர்களா. இத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்து நீங்கள் நல்லா இருப்பீங்களா. அது போலியான வீடியோ என ஸ்ருதி கூறுகிறார். அது உண்மை என்றால் அவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளாலும், இதுபோன்ற காஸ்டிங் கவுச்சாலும் என்னைப் போன்ற பல நடிகைகளுக்கு இன்று சினிமா வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்களே உங்கள் சினிமா துறை நாறிப் போய் உள்ளது. முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, நியாயமான பட வாய்ப்புகள் வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.