மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து அருண்குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம் மார்ச் 27 அன்று பல சிக்கல்களை கடந்து மாலையில் வெளியானது.
வீர தீர சூரன் திரைப்படம் வெளியான கடந்த 5 நாட்களில் தமிழகத்தில் சுமார் 34 கோடி வரை வசூலித்துள்ளது. படம் வெளியான முதல் முதல் நாள் சுமார் 3.90 கோடியும், இரண்டாம் நாள் 7.80 கோடியும், மூன்றாம் நாள் சுமார் 8 கோடியும், 4 ஆம் நாள் 8.34 கோடியும், ஐந்தாம் நாள் சுமார் 6 கோடி சேர்த்து மொத்தம் 34 கோடி வரை தமிழகத்தில் வசூலித்துள்ளது.
பைவ் ஸ்டார் செந்தில் இந்த திரைப்படத்தின் தமிழக உரிமையை சுமார் 22 கோடிக்கு வாங்கியுள்ளார். இதனால் இந்த திரைப்படத்தை வாங்கியவருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தமிழகத்தில் லாபகரமான படமாக அமையும் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவது சேர்த்து இந்த திரைப்படம் சுமார் 45 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியுள்ளது.