கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
எம்ஜிஆரும், கருணாநிதியும் சினிமாவில் இணைந்து பயணித்தபோது புராண படங்களிலும், பக்தி படங்களிலும் பணியாற்றாமல் இருந்தார்கள். ஆனால் எம்ஜிஆர் தனது ஆரம்ப காலத்தில் சில புராண கேரக்டர்களில் நடித்தார். கருணாநிதி வசனம் எழுத எம்ஜிஆர் நடித்த ஒரே புராண படம் 'அபிமன்யூ'.
ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் எம்ஜிஆர் அர்ச்சுணனாக நடித்தார். அதாவது அபிமன்யூவின் தந்தை. அவரது கேரக்டர் சிறியதுதான் அபிமன்யூவாக டைட்டில் கேரக்டரில் நடித்தவர் எஸ்.எம்.குமரேசன். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக நடிக்கவில்லை. இந்த படத்திற்காக ஏராளமான விருதுகளை பெற்றார். இவர்கள் தவிர யு.ஆர். ஜீவரத்னம், பி.வி. நரசிம்ம பாரதி, மாலதி, எம்.ஆர். சந்தானலட்சுமி, எம்.ஜி. சக்ரபாணி, எம்.என். நம்பியார் மற்றும் எம்.எஸ்.எஸ். பாக்யம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
கருணாநிதியும் அவரது வசன குருநாதர் ஏ.எஸ்.ஏ.சாமியும் இணைந்து படத்திற்கு வசனம் எழுதினார். அர்ச்சுணன் மகன் அபிமன்யூ இறந்து கிடக்கும்போது அர்ச்சுணன் 'என் தமிழ் மகனே' என்று அழுத காட்சி சர்ச்சை ஆனது. இந்த படத்தில் கருணாநிதி வசனம் எழுத வாங்கிய சம்பளம் 230 ரூபாய். படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தை எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் ஆகியோர் இயக்கி இருந்தனர்.