தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'.
இப்படத்தில் 2002ல் நடந்த குஜராஜ் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் கலவரத்தின் போது முஸ்லிம் மக்களைக் கொன்றவரின் பெயர் 'பாபா பஜ்ரங்கி' என படத்தில் இடம் பெற்றுள்ளது. படத்தில் அந்தக் கதாபாத்திரத்தைத்தான் முக்கிய வில்லனாகக் காட்டியுள்ளார்கள்.
படத்தில் மேலும் சில காட்சிகள் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வட இந்திய மாநிலங்களில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும், வில்லனின் பெயரை மாற்ற வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.
இதையடுத்து படத்தில் உள்ள 17 காட்சிகளை சரி செய்து நீக்கவும், வில்லனின் பெயரை மாற்றவும் படக்குழு தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவற்றைச் செய்து மீண்டும் சென்சார் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.
இந்தப் படத்தில் இவ்வளவு சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் நிலையில் அதை சென்சார் செய்தவர்கள் எப்படி அனுமதித்தனர் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சர்ச்சைகளால் படத்தின் வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.