'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ள படம் சிக்கந்தர். இந்த படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ராஷ்மிகா. அப்போது அவரிடத்தில் அவரது காலில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, தற்போது நன்றாக குணமடைந்து வருகிறேன். என்றாலும் முழுமையாக குணமடைய ஒன்பது மாதங்களாகும் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.
தொடர்ந்து அவரிடம் உங்களது அழகின் ரகசியம் என்ன? என்று குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் எனது மேனியை நன்றாக பராமரித்து வருகிறேன். அதோடு உண்மையான கனிவான எண்ணங்களும், மனமகிழ்ச்சியும் என் சருமத்திற்கு சிறந்த தோல் மருத்துவர்கள். அப்பா - அம்மா மற்றும் அவர்களின் நல்ல மரபணுக்களின் ஆசீர்வாதம் தான் இந்த அழகின் ரகசியம் என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அவரை இன்ஸ்டாகிராமில் 45 மில்லியன் பேர் பாலோ செய்து வருகிறார்கள்.