குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
தமிழ் சினிமா உலகை பொறுத்த வரை வாரம் வாரம் படங்கள் வெளியாவதும் அதில் எந்த படமும் வெற்றியை பெரிதளவில் தேடி தருவதில்லை. அந்த வகையில் இந்த வாரமும் நேரடி தமிழ் படமாக மொத்தம் 4 படங்கள் வெளியாகியது. அவற்றின் வசூல் நிலவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
வீர தீர சூரன் : அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பல சிக்கல்களுக்கு நடுவே மாலை காட்சிகள் முதல் மார்ச் 27 அன்று வெளியானது. வெளியான முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிக அளவில் வசூல் ஈட்டவில்லை என்பதே உண்மை. அதேசமயம் இன்று முதல் திங்கள் வரை தொடர் விடுமுறை என்பதால் படத்திற்கு வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி டோர் : நடிகை பாவனாவை சில ஆண்டுகளுக்கு பிறகு நாம் திரையில் பார்த்த படம் தி டோர். ஜெயதேவ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஹாரர் திரில்லராக வந்தது. ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே காட்சிகள் போடப்பட்டது. மற்ற எங்கும் இந்த திரைப்படம் ஜொலிக்கவேயில்லை.
வெட்டு : அம்மா ராஜசேகர் எழுதி இயக்கியிருந்த இந்த படமும் இந்த வாரம் வெளியாகியது. ஆனால் வெளியிட்ட திரையரங்கம் முழுவதும் காற்று வாங்கியதே மிச்சம் என்று சொல்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
அறம் செய் : பாலு வைத்தியநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாகவும் நடித்த படம் அறம் செய். இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில் ஒரே ஒரு காட்சி கூட அரங்கம் நிறைந்த காட்சியாக எங்குமே நிற்கவில்லை என்பதே உண்மை. வெளியிட்ட பல இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதே மிச்சம்.
எம்புரான் : பிருத்விராஜ், மோகன்லால் கூட்டணியில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியது. வெளியான முதல் நாள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும் அடுத்த நாளே படம் டல் அடிக்க துவங்கியது.