திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? |
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் 'அன்னை இல்லம் எனது வீடல்ல தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார்.
இந்த நிலையில் தற்போது பிரபுவும் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: எனது தந்தை சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தபோதே, அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்தார். இதற்கு எனது சகோதரரும், சகோதரிகளும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து எனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. எனவே, அன்னை இல்லத்தின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது.
எனது சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்சினையில் எனக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே, எனது பெயரில் உள்ள வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.