சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு |
சமீப வருடங்களாக தென்னிந்திய மொழி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி நடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழில் மட்டுமே படங்களை இயக்கி நடித்து வந்த சேரன் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்து 'நரிவேட்டை' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.
'இஷ்க்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அனுராஜ் மனோகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது தமிழில் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பின்னணி கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சேரனின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.