அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
சென்னை : பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹூசைனி, 60 புற்றுநோய் பாதிப்பால் இன்று(மார்ச் 25) அதிகாலை காலமானார்.
பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி, ஏராளமானவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்தார். மேலும் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகர் விஜயின் பத்ரி படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தார். நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் போன்ற திரைக்கலைஞர்களுக்கும் இவர் தற்காப்பு கலை தொடர்பான பயிற்சி அளித்துள்ளார்.
அண்மைக்காலமாக அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஹூசைனி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து சிகிச்சைக்காக ரூ.5. லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை (மார்ச் 25) 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 நாட்களாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அவரது மரணத்தை அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, ஷிஹான் ஹூசைனி தமது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார்.
ஹூசைனி ஆசை நிறைவேறுமா...
முன்னதாக ஹூசைனி சிகிச்சையில் இருந்தபோது நடிகர்கள் விஜய், பவன் கல்யாணுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில், விஜய், பவன் என்னிடம் பயிற்சி பெற்றவர்கள். ‛‛என்னுடைய கலை மாளிகையை முடிந்தால் பவன் வாங்கி அதை கலைக்கோயிலாக மாற்ற வேண்டும். அந்த பணத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும். அதுபோல் விஜய்க்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கொரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்'' என்று தனது ஆசையை கூறியிருக்கிறார்.
ஹூசைனியின் ஆசையை விஜய், பவன் கல்யாண் நிறைவேற்றுவார்களா...!
பவன் கல்யாண் இரங்கல்நடிகரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛ஹுசைனின் பயிற்சியின் கீழ் சுமார் 3000 பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர். அவர் ஒரு பன்முக திறமைசாலி இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார் நல்ல ஒரு ஓவியச் சிற்பி.. இளைஞர்களுக்கு தற்காப்பு கலைகளை இன்னும் எளிதாக கிடைக்கச் செய்ய விரும்பினார் அவரின் மரணத்திற்குப் பிறகு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது மனநிலையை வெளிப்படுத்தியது என்று கூறி அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று கூறியுள்ளார்.