அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் |
தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களை தயாரித்து வருபவர் ஆகாஷ் பாஸ்கரன். அவரின் டான் பிக்சர்ஸ் மூலம் படங்களை தயாரிக்கிறார்.
கடந்த மாதத்தில் சமூக வலைதளத்தில் தனுஷ் இயக்கத்தில் அஜித்குமார் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்; இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து இப்போது ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, "தனுஷ் இயக்கத்தில் அஜித் சார் நடிக்கிற படம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறது. இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. அடுத்ததாக தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் விரைவில் துவங்குகிறோம்" எனக் கூறினார்.