பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவில் விஜய்யின் மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் அட்லி. ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய 'ஜவான்' ஹிந்திப் படம் 2023ல் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனரானார் அட்லி.
அவரது அடுத்த படத்தில் நடிக்கப் போவது சல்மான் கானா, அல்லு அர்ஜுனா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இப்போது அல்லு அர்ஜுன் அவரது படத்தில் நடிக்க உள்ளார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இப்படத்திற்கான கதை விவாதம், முன்தயாரிப்புப் பணிகள் ஆகியவை துபாயில் நடந்து வருகிறது. அங்குள்ள பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இதற்கான பணிகளை அட்லி தனது குழுவினருடன் செய்து வருகிறார். அங்கேயே அல்லு அர்ஜுனும் தங்கியுள்ளதாகத் தகவல். அவரது தோற்றம் குறித்த ஆலோசனையில் அவர் உள்ளாராம். கடைசி கட்டத்தில் உள்ள இந்த ஆலோசனை விரைவில் முடிவடைந்து படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்பது லேட்டஸ்ட் அப்டேட்.