2026 ஜூன் 12ல் 'ஜெயிலர் 2' ரிலீஸ் : ரஜினிகாந்த் தகவல் | விஷாலின் 'மகுடம்' படப்பிடிப்புக்குச் சென்று வாழ்த்திய டி ராஜேந்தர் | 150 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | காப்பிரைட் வழக்கு : ஏஆர் ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து | 'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் |
விஜயகாந்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. ஒரே படத்தில் வெற்றி, ஆக்ஷன் ஹீரோ பட்டம் எல்லாம் கிடைத்தது. அதை இயக்கியது எஸ்.ஏ.சந்திரசேகர். அதன்பிறகு, நடித்த 'நெஞ்சிலே துணிவிருந்தால்' 'நீதி பிழைத்தது', 'சாதிக்கொரு நீதி', 'சட்டம் சிரிக்கிறது', 'ஆட்டோ ராஜா', 'பட்டணத்து ராஜாக்கள்' என வரிசையாக 5 படங்கள் தோல்வியைத் தழுவின.
இனி அவ்வளவுதான் மதுரைக்கு சென்று ரைஸ்மில் பணிகளை கவனிக்க வேண்டியதுதான் என்று விஜயகாந்த் நினைத்துக் கொண்டிருந்தபோது மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகர் மூலமே விஜயகாந்துக்கு ஒரு வெற்றி கிடைத்தது அது 'சாட்சி'.
ஆனால் சாட்சி படத்தை விஜகாந்தை வைத்து இயக்கும் எண்ணம் முதலில் எஸ்.ஏ.சந்திரசேருக்கு இல்லை. காரணம் சட்டம் ஒரு இருட்டறை வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இதனால் சாட்சி படத்தை ஒரு வெற்றி ஹீரோவை வைத்துதான் இயக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அந்த சமயத்தில் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த 'கோழி கூவுது' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. உடனே, தன்னுடைய படத்தில் பிரபுவை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபுவை அணுகுகிறார். தொடர் தோல்விப்படங்கள் கொடுத்த இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்ததால், அவர் படத்தில் நடிக்க பிரபு மறுத்துவிடுகிறார்.
பின்னர் 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற காதல் படங்களில் நடித்து இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருந்த கார்த்தியை அணுகுகிறார். கார்த்தியும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. பிரபு, கார்த்தி என இருவரது கால்ஷீட்டுமே கிடைக்காத காரணத்தால் மீண்டும் விஜயகாந்த்திடமே செல்கிறார். படவாய்ப்புகள் ஏதுமின்றி இருந்த விஜயகாந்த் உடனே சம்மதித்து விடுகிறார். அப்படித் தொடங்கப்பட்ட படம்தான் 'சாட்சி'.
தோல்விகளை சந்தித்து வந்த இயக்குனரும், ஹீரோவும் கொடுத்த வெற்றிப் படமாக 'சாட்சி', வரலாற்று சாட்சியாக இருக்கிறது.