30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி | மகனுக்காக படம் தயாரிக்காதீர்கள் : தயாரிப்பாளர்களுக்கு பேரரசு வேண்டுகோள் | 12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம் | பிளாஷ்பேக் : எதிர்ப்புகளால் மாற்றப்பட்ட ரஜினி படத்தலைப்பு | பிளாஷ்பேக் : டி.எஸ்.பாலையா ஹீரோவாக நடித்த 'சண்பகவல்லி' | பஹல்காம் தாக்குதல்: நடிகர் அஜித் கண்டனம் | அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன் | நிறைவுக்கு வரும் 'குட் பேட் அக்லி' ஓட்டம் | அக்டோபரில் 'பாகுபலி' ரீரிலீஸ் | 3000 தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர். விஜயபுரி வீரன், பார்த்தால் பசிதீரும், அன்பே வா, அதே கண்கள், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தாள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
1983ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் 'பாயும்புலி' என்ற படத்தை தயாரித்தது. '36 சேம்பர் ஆப் ஷாலின்' என்ற புரூஸ் லீ படத்தின் பாணியில் அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம், அதிரடியான சண்டை காட்சிகளை அமைத்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
'முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைத்தது போன்று இந்த படத்திலும் ஒரு பிரபலத்தை அதிரடியாக களம் இறக்க முடிவு செய்தது. அப்போது ஏ.சி.திருலோகச்சந்தர் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிப்பதற்காகவே சினிமாவுக்கு வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதை கவனித்த ஏவிஎம் நிறுவனம் 'பாயும்புலி' படத்தில் வில்லனாக நடிக்க ஏ.சி.திருலோகச்சந்தரை அணுகியது. கதையை கேட்ட திருலோகச்சந்தருக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் நடிக்க மறுத்து விட்டார்.
அதன்பிறகு வில்லன் கேரக்டருக்கு அப்போது வளர்ந்து வந்த கராத்தே மணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சண்டை காட்சிகளை வடிவமைப்பது தொடர்பாக கராத்தே மணிக்கும், ஜூடோ ரத்தினத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து ஜெய்சங்கர் வில்லனாக நடித்தார்.