அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' டிவி நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானது. அது போலவே தென்னிந்திய மொழிகளிலும் பிரபல நடிகர்களை வைத்து அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.
தமிழில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் சுதீப், தெலுங்கில் நாகார்ஜுனா ஆகியோர் பல சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார்கள்.
கமல்ஹாசன் கடந்த சீசனைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்தார். கமல் அளவுக்கு விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நடத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
கன்னடத்தில் ஜனவரியுடன் முடிந்து போன 11வது சீசனுடன் விலகுவதாக சுதீப் அறிவித்துவிட்டார். அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பது வருடக் கடைசியில்தான் தெரியும்.
மலையாளத்தில் கடந்த 6 சீசன்களாக நடிகர் மோகன்லால் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் 3வது சீசன் முதல் முடிந்த 8வது சீசன் வரை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார். அடுத்து வர உள்ள 9வது சீசனைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலக நாகார்ஜுனா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்ப சில சீசன்கள் விறுவிறுப்பாக இருந்தன. போகப் போக அந்த நிகழ்ச்சி மீதான ஆர்வம் ரசிகர்களுக்குக் குறைந்துவிட்டது. இருந்தாலும் ஹிந்தி சீசன் மட்டும் 18 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.