கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் | கூலியில் நடித்தது மிஸ்டேக் என சொன்னாரா அமீர்கான் | ரயிலில் இருந்து குதித்த நடிகை படுகாயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி |
80-கள் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பிந்து கோஷ். தன் பருமனான உடல் தோற்றத்தால் உருவக்கேலிக்கு உள்ளாகி நம்மை சிரிக்க வைத்த பிந்து கோஷுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வயதில் மூப்படைந்துவிட்ட பிந்து கோஷ் உடல்நலக் குறைவாலும் மிகவும் கஷ்டப்படுகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களாலும் பிந்து கோஷின் மருத்துவ செலவுகள் மற்ற பராமரிப்பு செலவுகளுக்கு உதவ முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் பிந்து கோஷின் நிலை தெரிந்து அவருக்கு உதவிய சக நடிகர்களும் தற்போது அவரை கண்டுகொள்ளவில்லை என்பதால் மிகவும் கஷ்டப்படுகிறார். இதுகுறித்து நடிகை ஷகீலா சமீபத்திய பேட்டிகளில் அதிகமாக பேசியும் அவருக்காக உதவியும் கேட்டு வந்தார்.
இந்நிலையில், கேபிஒய் பாலா, நடிகை ஷகீலாவுடன் பிந்து கோஷின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார். பிந்து கோஷிற்கு பாலா யார் என்றே தெரியாது. ஆனாலும், பாலா பிந்து கோஷிற்கு 80000 ரூபாய் தந்து உதவியுள்ளார். மேலும், தன்னால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்வதாகவும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்றும் நம்பிக்கை அளித்து பேசியுள்ளார்.