‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகின.
இதனிடையே, அட்லி இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வர ஆரம்பித்தன. சல்மான்கானுக்காக கதை எழுதி வந்த அட்லி, அதன் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். அந்த பட்ஜெட்டிற்கு அல்லு அர்ஜுன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பேசி முடிவெடுத்தார்கள் என்றும் செய்திகள் வந்தது.
பாலிவுட் மீடியாக்கள் இந்தப் படம் பற்றி கூடுதலாக அப்டேட்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசியுள்ளதாகவும், ஹிந்தி நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அல்லு அர்ஜுன் அப்பா கதாபாத்திரத்தில் சீனியர் தமிழ் நடிகர் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். இசையமைப்பதற்கு சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்.
ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.