ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

மறைந்த இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், 2005ல் இயக்குனராக அறிமுகமான படம் ‛சச்சின்'. விஜய், ஜெனிலியா, வடிவேலு, பிபாஷா பாசு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். தாணு தயாரித்தார்.
விஜய் - ஜெனிலியாவின் காதல், அவர்களுக்குள்ளான ஈகோ மற்றும் வடிவேலுவின் காமெடி, சூப்பர் ஹிட் பாடல்கள் போன்ற பிளஸ் அம்சங்கள் இந்த படத்தை ரசிக்க வைத்தன. இருப்பினும் அந்த சமயம் ரஜினியின் ‛சந்திரமுகி' படமும் வெளியானதால் இந்தப்படம் பெரியளவில் வசூலிக்கவில்லை. ஆனால் சச்சின் படத்திற்கு தனி ரசிகர்கள் உண்டு. இப்போது அந்த படத்தை டிவியில் ஒளிபரப்பினாலும் ரசிகர்கள் ரசிப்பர்.
இந்நிலையில் சச்சின் படம் வெளியாகி இந்தாண்டோடு 20 ஆண்டுகளை கடக்கிறது. இதையொட்டி இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய போவதாக இப்பட தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இந்தகாலத்திற்கு ஏற்றபடி தொழில்நுட்ப ரீதியாக படம் மெருகூட்டப்பட்டு கோடையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த விஷயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




