இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாரிக்கப்படுகிறது. இதில் மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடிக்கிறார். இது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இந்த படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது மாதவன் நடித்த நம்பி நாராயணன் கதையான 'ராக்கெட்டரி' படத்தை தயாரித்த நிறுவனங்கள். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசராக அரவிந்த் கமலநாதன் பணியாற்றுகிறார்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இந்த மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கும் விதமாக ரியல் லொகேஷனில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
நம் நாட்டின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் இந்தியா இன்று சிறந்து விளங்குவதற்கு அளப்பறிய பங்களித்த பல மேதைகளைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் ஆகச்சிறந்த வழியாகவும் இந்த பயோபிக் படங்கள் இருக்கின்றன. கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'ஜி.டி. நாயுடு- தி எடிசன் ஆப் இந்தியா' படத்தில் நடிகர் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடிக்க இருக்கிறார்.
ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்காமல் நடிகர் மாதவன் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' மற்றும் அவரது சமீபத்திய ரிலீஸான 'சைத்தான்' படத்தின் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்போது, மாதவன் மற்றொரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'இந்தியாவின் எடிசன்' மற்றும் 'கோயம்புத்தூரின் வெல்த் கிரியேட்டர்' என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.