போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்த படம் 'அமரன்'. தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவி நடித்திருந்தார்.
இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று ரூ 300 கோடிக்கும் அதிக வருவாய் ஈட்டியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான படங்களையும் தாண்டி அமரன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்தது.
இப்படம் இன்றுடன் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது படக்குழு மற்றும் தமிழ் திரை உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வந்த படத்தை முடித்துவிட்டு, இயக்குனர் சுதா கொங்ரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சிதம்பரம் பகுதியில் வேகமாக நடைபெற்று வருகிறது. இது இவரின் 25 வது படம் ஆகும்.