மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். குறிப்பாக திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்றவர். சமீப வருடங்களாக பாலிவுட்டிலும் படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்களை மட்டுமே வைத்து படம் இயக்காமல் ஆசிப் அலி, பஷில் ஜோசப் போன்ற இரண்டாம் நிலை ஹீரோக்களையும் தொடர்ந்து படம் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். சில மாதங்களுக்கு முன்பு பஷில் ஜோசப் இயக்கத்தில் நுணக்குழி என்கிற காமெடி திரைப்படத்தை திரில்லிங் கலந்து இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலி நடித்து வரும் மிராகே என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இதற்கிடையே திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை உருவாக்கும் பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம் ஜீத்து ஜோசப். கடந்த 2013ல் பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற படம் மூலம் இயக்குனர் ஆனவர் தான் ஜீத்து ஜோசப். அதன்பிறகு 2016ல் மீண்டும் பிரித்விராஜை வைத்து ஊழம் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறத் தவறியது. இந்த நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் தனது முதல் பட நாயகன் ஆன பிரித்விராஜ் உடன் கூட்டணி சேர்கிறார் ஜீத்து ஜோசப்.