ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தென்னிந்திய சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வருவது கேரள சினிமாவில் தான். தற்போது அங்கு வெளியாகும் படங்களும் 100 கோடி, 200 கோடி வசூலை நெருங்கிவிட்டன. இந்நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஜூன் 1 முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் சுரேஷ் குமார் கூறுகையில், ‛‛பொழுதுபோக்கு வரி, சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் தயாரிப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதை குறைக்க சொல்லி அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜுன் 1 முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடக்காது என முடிவு செய்துள்ளோம். மேலும் நடிகர்களின் அதிக சம்பளமும் தயாரிப்பாளர்களை பாதிக்கிறது. படத்தின் பட்ஜெட்டில் 60 சதவீதம் நடிகர்களுக்கு செல்கிறது. ஜனவரியில் மட்டும் கேரள சினிமாவிற்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.