டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? |
துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கில் மட்டுமல்ல அவர் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மலையாளத்திலும் அவரது புதிய படங்கள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கிய நகாஸ் ஹிதாயத், துல்கர் சல்மானை வைத்து அவரது நாற்பதாவது படத்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் உடன் துல்கர் சல்மானின் வே பாரர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் எஸ்.ஜே சூர்யா மலையாள திரையுலகில் நுழைகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார் என்றும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மிஷ்கினுக்கும் மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.